Translate

Thursday, August 29, 2013

தாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில்


நான் திருச்சியில் உள்ள சேஷசாய் தொழில் நுட்ப பயிலகத்தில் டிப்ளோம

இன்ஜினியரிங் படித்து கொண்டிருந்த பொழுது (1993 -ல்) என்னுடன்

படித்த சங்கர் கணேஷ் மற்றும் ராஜு மேலும் முன்று
மாணவர்கள் விடுமுறை நாளில் கல்லணை சென்று
சுழலில் சிக்கி உயிர் இழந்தனர்.











இந்த நிகழ்வு ஒட்டுமொத்த திருச்சியையே சோகத்தில்
ஆழ்த்தியது

கல்லணை சென்ற மாணவர்கள் அனைவரும் கல்லூரி

விடுதியை சேர்ந்தவர்கள்


இதில் சங்கர் கணேஷ் மற்றும் ராஜு பால்ய பருவத்தில் இருந்தே நண்பர்கள்

சங்கர் கணேஷின் அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்கள்.

ராஜுவின் அப்பா கால்நடை மருத்துவர்.

சங்கர் கணேஷ்சும் ராஜுவும் ஒன்றாம் வகுப்பில்

இருந்தே ஒன்றாக படித்தவர்கள்


சங்கர் கணேசும் ராஜுவும் நிலகோட்டையை சேர்ந்தவர்கள்.

"விடுதியை விட்டு

செல்லாதே"

"விடுதியை விட்டு
செல்லாதே"








என்று படித்து படித்து சொன்னேனே

இப்படி எங்களை விட்டு பிரிந்து விட்டாயே

என்ற சங்கர் கணேஷின் தாயாரின் கதறல் பார்போரை

உள்ளம் உருக செய்வதாய் இருந்தது.


தினத்தந்தி இதழ இந்த செய்திகளை வெளியிட்டு இருந்தது.



அந்த தாயின் தவிப்பை நான் அப்பொழுதே பாடல் வடிவில்
எழுதியிருந்தேன்


அதோடு சில புதிய சரணங்களையும் சேர்த்து எழுதியுள்ளேன்

உங்களது மேலான பார்வைக்கு என் படைப்பை
படையல் ஆக்குகிறேன்

பல்லவி

தாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில்
உறங்காத விழிகள் இரண்டும் கண்ணீர் என்னும் ஆற்றில்

சரணம்-1

ஓடிவரும் நதியலைகள்
காலத்தின் கண்ணீர் மொழி
போகுமிடமெலாம் கதை கூறுமோ
சோகங்களை கூறி மெல்ல கலைந்தோடுமோ
நீ நடந்த பாதை எல்லாம்
நான் நடந்து பார்த்தேன் மகனே
தேராக நீ அசைந்த பாதையிலே
நினைவுகளின் ஊர்கோலம் கண்ணே

சரணம்-2

நெஞ்சில் ஆடும் நினைவலையில்
சிறுமலரின் மழலை மொழி
சிலுவையாகி எந்தன் நெஞ்சில் சுமையாகுமோ
சுமைதாங்கி ஒன்றை காலம் தரகூடுமோ
தேன் கொடுத்த பூக்கள் எல்லாம்
சருகாக உதிரும் கோலமே
வேர்பிடித்த மண்ணில்
மழை நீரின் ஈரமே


சரணம்-3

காணுகின்ற கனவுகளில்
துரத்தி வரும் உன் நினைவு
பூமலருகின்ற வேளை புயல் வீசியதோ
தீ இல்லாமலே அனல் பேசியதோ
வான் பார்த்து போகும் பயணம் உனக்கு
மண் மீது நரகம் எனக்கு
நீ நடை வண்டி பயின்ற காலம் மனதில்
நடைபோடும் நேரம் இன்று
நீராக மாறிய மேகமே
கண்ணீராக மாறிய சோகமே

No comments:

Post a Comment