Translate

Tuesday, December 31, 2013

ஹைக்கூ


மேகத்தை விமானம் தீண்டுவது


என்ன பெரிய வியப்பு


கடலுக்குள் ஆகாயமே தத்தளிக்கிறது

Friday, November 22, 2013

லக்ஷ்மி சிவபார்வதி


லக்ஷ்மி சிவபார்வதி

அந்த மனிதனின் வாழ்க்கையை

கதையாக எழுத வந்தவள்தான்

அதில் ஒரு

கதா பாத்திரமாகவே மாறிபோனாள்


இசையின் கவிதை மொழி




பழைய ராகம்: நான் கிராமத்தின் ராஜாங்கம்

புதிய ராகம்: நான் நகரத்தின் துள்ளாட்டம்

பழைய ராகம்: தமிழ் திரை இசைவானில் நானோர் யுகசந்தி

புதிய ராகம்: நான் உலகமெல்லாம் சுற்றி வரும் இசை தந்தி


புதிய ராகம்: நான் சூரியன் ஆகி விட்டேன்

பழைய ராகம்: நானோ நட்சத்திரம் ஆகி விட்டேன்

பழைய ராகம்: காலத்தால் நான் முந்தி

புதிய ராகம்: இளமையால் நான் பிந்தி

எல்லாம் வல்லவன்
ஏகன் சொன்னான்:

காலத்துக்கு ஒரு நாள் நான் முந்தி

கண்ணதாசனும் வைரமுத்துவும்


Thursday, November 7, 2013

வெண்ணிலவின் கண்ணீர்

வெண்ணிலவின் கண்ணீர் என்ற தலைபிட்ட கவிக்கோ. அப்துல் ரகுமானின் கவிதையை வாசித்தபோது எனக்கு சில சிந்தனைகள் உதித்தது.அவற்றை பகிர்ந்துகொள்ளவே இந்த சிறு பதிவு.


என் அணைப்பை விட்டே
இனி சிறிது என் செல்வத்தை
உன் அணைப்பில் ஏந்தென்று
உறக்கத்தைத் தாய்ழைக்கும்
தாலாட்டு பாட்டினிலே

என்ற அந்த கவிதையில்,கவிஞர் அன்னையின் அரவணைப்பிற்கு
ஈடாக கூறியுள்ள உறக்கத்தை தாண்டியும் நம் சிந்தனை விரிகிறது.

அன்னையின் அரவணைப்பிற்கு ஈடாக உறக்கம் மட்டும்தான் இருக்க வேண்டுமா?

தாலாட்டு பாடல் இருக்க கூடாதா?
என்ற சிந்தனை கவிதையை வேறு விதமாகவும் அமைக்க நம்மை தூண்டுகிறது.

Wednesday, October 30, 2013

சிலைகள் பேசினால் ...



சிலைகள் பேசினால் ...


என்

கொள்கைகளை எல்லாம்

காற்றில் பறக்க விட்டு விட்டு

என் சிலைக்கு மட்டும்

மாலையிடும் உங்களை விடவும்

எச்சமிடும் பறவைகள்

எவ்வளவோ மேல்.

Monday, October 28, 2013

வானத்திலே திருவிழா

ஒவ்வொரு மனிதனும் தன் குழந்தை பருவத்தை
மறந்து விடமுடியாது

கவலைகள் ஏதுமின்றி வானம்பாடிகளை போலே
நாம் பறந்து திரிந்த காலங்கள் அவை.

வயதுகள் ஏற ஏற பொறுப்புகளும்,பொருளாதார
சுமைகளும் நம்மை அழுத்துகின்றன.

மீண்டும் அந்த ஆரம்பபள்ளி நாட்களுக்கு ...

நாம் ஊஞ்சல் ஆடிய பழைய தொட்டிலுக்கு ...

ஒரு மீள் பயணம்.

அங்கே நம் மனகுகை ஓவியங்களில்தான்

எத்தனை எத்தனை வண்ண வண்ண

ஓவியங்கள்

கால கரையான் அரிககாமலும்,எண்ண தூசிகள்
படியாமலும் ஒரு சிலரால்தான் அந்த ஓவியங்களை

பாதுகாக்க முடிகிறது.


அந்த வகையிலே இந்த குழந்தை இலக்கிய கவிதை

என் ஆரம்பபள்ளி நாட்களில் நான் தமிழ் பாட

நூலில் படித்தது.

சுவைத்தது.

இந்த கவிதையை எழுதியவர் கவிஞர் பொன்.செல்வ கணபதி.


கவிஞர் மு.மேத்தா உடன் பணியாற்றிய பேராசிரிய
நண்பர்.


சென்னை தலை நகரம்
மட்டும் அல்ல

சிலை நகரமும் கூட

இங்கேதான் தலைவர்கள்

சிலைகளில் கூட பேசிக்கொண்டு இருக்கிறார்கள்


உழைப்பாளிகள்

உழைத்து கொண்டு இருக்கிறார்கள்

என்ற அற்புதமான கவிதை வரிகளை படைத்த
முற்போக்கு கவிஞர்.

அந்த கவிதை இதோ...

வானத்திலே திருவிழா

வழக்கமான ஒருவிழா

இடிஇடிக்கும் மேளங்கள்

இறங்கி வரும் தாளங்கள்


மின்னல் ஒரு நாட்டியம்

மேடை வான மண்டபம்

தூறல் ஒரு தோரணம்

துய மழை காரணம்


எட்டு திசை காற்றிலே

ஏக வெள்ளம் ஆற்றிலே

தெருவெல்லாம் வெள்ளமே

திண்ணை ஓரம் செல்லுமே


தவளை பாட்டு பாடுமே

தண்ணீரிலே ஆடுமே

Sunday, October 27, 2013

தொலைவில் ஒரு சகோதரன் -1

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில்

ஒரு பெயர் அறியாத சகோதரன்

அவன் விட்டின் முன்னே

நிற்கும் புகை படம்

கூகிள் மாப்சில் பார்கிறேன்

என் வீட்டில் இருந்தபடியே


உள்ளம்கையில் உலகம்
வந்ததாய் என் மனம் துள்ள

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

கணியன் பூங்குன்றனின் வரிகளில்

என் இதயம் நனைய



"வானத்துக்கு கிழே எல்லோரும்
வாழ்கிறோம் "

என்று தன் கவிதை கரங்களால்
உலக மக்களை எல்லாம்
அணைத்துகொண்ட கவிஞர் நா.காமராசனின்
வரிகளில் என் மனம் சிலிர்க்க


ஒரு நொடிதான்
இவையெல்லாம்

யார் அவன் ?
பெயர் என்ன ?

வீட்டின் கதவை திறக்கிறானா ?
வீட்டின் கதவை பூட்டுகிறானா ?

திருமணம் ஆனவனா ?
அனபானவளா அவன் மனைவி ?

எம் ஈழதமிழரின் வேதனையை
நான் உரைத்தால்

காது கொடுப்பானா ?

அவர்தம் கண்ணீர் துடைக்க
கை கொடுப்பானா ?

கேள்விகளால் நான்

கிழிக்கப்பட
வெகு தொலைவில் சென்றுவிட்டான்

அந்த பெயர் அறியாத சகோதரன்

மீண்டும்.

தொலைவில் ஒரு சகோதரன்

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில்

ஒரு பெயர் அறியாத சகோதரன்

அவன் விட்டின் முன்னே

நிற்கும் புகை படம்

கூகிள் மாப்சில் பார்கிறேன்

என் வீட்டில் இருந்தபடியே



உள்ளம்கையில் உலகம்
வந்ததாய் என் மனம் துள்ள

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

கணியன் பூங்குன்றனின் வரிகளில்

என் இதயம் நனைய



"வானத்துக்கு கிழே எல்லோரும்
வாழ்கிறோம் "

என்று தன் கவிதை கரங்களால்
உலக மக்களை எல்லாம்
அணைத்துகொண்ட கவிஞர் நா.காமராசனின்
வரிகளில் என் மனம் சிலிர்க்க


ஒரு நொடிதான்
இவையெல்லாம்

யார் அவன் ?
பெயர் என்ன ?

வீட்டின் கதவை திறக்கிறானா ?
வீட்டின் கதவை பூட்டுகிறானா ?

திருமணம் ஆனவனா ?
அனபானவளா அவன் மனைவி ?

எம் ஈழதமிழரின் வேதனையை
நான் உரைத்தால்

காது கொடுப்பானா ?

அவர்தம் கண்ணீர் துடைக்க
கை கொடுப்பானா ?

கேள்விகளால் நான்

கிழிக்கப்பட
வெகு தொலைவில் சென்றுவிட்டான்

அந்த பெயர் அறியாத சகோதரன்

மீண்டும்.

Wednesday, September 25, 2013

ஒடுக்கபட்டவர்களிடமும் ஒடுக்கபட்டவள் பெண்

சில ஆண்டுகளுக்கு முன்னர் தினமணி கதிர் இதழில்
புதுவை பல்கலை கழக நாடகத்துறை பேராசிரியை
ஒருவரின் நேர்காணலை வாசிக்கின்ற வாய்ப்பு
கிடைத்தது.


அவருடைய நேர்காணல் பெண்ணியம் சார்ந்த என்
பார்வைகளை கூர்மை படுத்த உதவியது.


அவர் சொல்கிறார் இந்த சமூகத்தில் கடை கோடி
பிரிவில் (ஜாதி ரீதியாக ,மற்றும் பொருளாதார ரீதியாக)
இருக்கும் ஆண் மகன் கூட தன மனைவியை
அடிமை படுத்தியே வைத்திருக்கிறான்.

இதற்கு அவர் இல்லக்கியத்தில் இருந்து உதாரணம்
தருகிறார்

அறிஞர் அண்ணா அவர்கள்,உணவு விடுதி
பணியாளர் பற்றி எழுதிய சிறுகதையில்
இந்த சமூக அநீதியை பதிவு செய்கிறார்.


அந்த சர்வர் தன் வாடிக்கையாளர் சிலரால்
அதிகாரம் செய்யபடுகிறார்.

அதன் எதிர்வினை மனைவியையே தாக்குகிறது.


மேலும் அந்த பேராசிரியை தன் எழுதிய நவீன நாடகம்
ஒன்றில் வரும் பாடலில் இந்திய பெண்மையின்
அடையாளம் கூறித்து பின்வருமாறு பதிவு செய்கிறார்

ஐந்து பேர் கற்பழித்த போது
பத்மினியாய் துடித்தது
தீயிட்டு கொளுத்திய போது
ரூப்கன்வராய் எரிந்தது


மேலும் இது குறித்த தொடர் சிந்தனையில்
இந்த சமூகத்தில் யார் நல்லவர்கள் ஆணா?
பெண்ணா என்பதல்ல கேள்வி
யார் யாரை ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதே கேள்வி
உதரணத்திற்கு ஒரு பெண் கெட்டவள் ஆக இருப்பதாக
கொண்டாலும் அவள் தன் மகளுக்கு மாப்பிள்ளையிடம்
இருந்து வரதட்சனை கேட்கமுடியுமா?

ஆண் மகனை உயர்த்தி பெண்ணை தாழ்த்தும்
சிந்தனைகளும்,நடைமுறைகளுமே ஆணாதிக்கம்.

அதுவே பெண் இனத்திற்கு முட்டுக்கட்டை
இந்த முட்டுக்கட்டைகளை உருவாகியதும் ஆண் வர்க்கமே.

இந்த புரிதலும் போராட்ட முன் எடுப்புமே
பெண் விடுதலையை பெற்றுத்தரும்.

படைபாளிகள் இயக்கம் சார்ந்து இயங்கலாமா?

படைபாளிகள் இயக்கம் சார்ந்து இயங்கலாமா?
என்ற விவாதம் நிகழ்ந்து கொண்டே வருகிறது.
இது குறித்து என் பார்வையை பதிவு செய்வதே
இந்த சிறு கட்டுரையின் நோக்கம்.


படைபாளிகள் தனித்தே இயங்க வேண்டும் என்பது
எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் கருத்து.


சுந்தர ராமசாமியின் மேற்கண்ட கருத்தை மறுக்கும்
ச.தமிழ்செல்வன் எந்த இயக்கத்தை
சாராமல் ஒரு படைப்பாளி இயங்கினாலும்
நகராட்சி , மாநகராட்சி போன்ற அரசமைப்பின்
கீழ் தானே வாழ்ந்து ஆக வேண்டும் என்கிறார்.


கவிஞர் மு.மேத்தா ஒரு நேர்காணலில்
ஒரு கவிஞன் ஒரு சமூக இயக்கத்தோடு தன்னை
ஒட்டி வைத்து கொள்ளலாம்.ஆனால் கட்டி வைத்து
கொள்ள கூடாது
என்கிறார்.

கவிஞரின் கருத்தும் ஏறக்குறைய சுந்தர ராமசாமியின்
கருத்தையே ஒத்து இருக்கிறது.


ஒரு படைப்பாளி குறிப்பிட இயக்கத்தின் கருத்துக்களால்
கவரப்பட்டு தன் படைப்புகளில் அவற்றை
பிரதி பலிப்பதோ மேற்கோள் காட்டுவதோ
தவறில்லை.

ஆனால் ஒரு இயக்கத்தின் முழுநேர பணியாளராக
மாறினால் தனித்தன்மையை இழக்க நேரிடும்.

ஒருவேளை விதிவிலக்காக ஒரு இயக்கத்தின்
முக்கிய பொறுப்பில் இருக்கும் போதே சுயமான
கருத்தையும் பேணி வரும் உரிமை இருக்குமானால்


அப்படி பணியாற்றுவதில் சிக்கலில்லை.

இந்த கூற்றுக்கு நடைமுறை உதாரணமாக
இருப்பவர் திரு.ரவிக்குமார் ஆவார்.

இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய
பொறுப்பில் இருப்பவர்.
இவருக்கும் கட்சி தலைவர் திரு.தொல்.திருமாவளவனுக்கும்
லட்சியம் ஒன்றே
என்றாலும் சிற்சில விசயங்களில் அதை அடையும்
வழிமுறைகளில் கருத்து வேறுபாடு உண்டு.


இந்த செய்தியை ஒரு நேர்காணலில் திரு .ரவிக்குமாரே
பதிவு செய்து இருக்கிறார்.

இப்படிப்பட்ட சிந்தனை சுதந்திரம் வி.சி. கட்சியில்
இருப்பது ஒரு தலித் விடுதலை இயக்கம் என்ற
வகையில் மிக மிக பொருத்தம் உடையதே.

Monday, September 23, 2013

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன்

சூரியனை காட்டி

இவன் அன்னையால்

சோறு ஊட்டப்பட்டவன்

மறைவாய் இருப்பதால்

இறை போன்றவன்

திருந்தாது சிங்கள இனவெறி

திருந்திட செய்யும் இவனின் தமிழ் நெறி

Sunday, September 22, 2013

Thursday, August 29, 2013முகவரிகள்


மகாகவி சுப்ரமணிய பாரதி
நத்தையாக கூட்டுக்குள்
ஒடுங்கிய அடிமை இந்தியருக்குள்
அடங்க மறுத்து
பறவையாகி சிறகை
விரித்தவன்


புரட்சி கவிஞர் பாரதிதாசன்
அம்பிகளை அடையாளம் காட்டி
தமிழ் தம்பிகளை தன்மானம் கொள்ளச்செய்த
தமிழ் தும்பி


கவிஞர் கண்ணதாசன்
இவன் முன்னே
கோப்பையில் மது வழிகிறது

இவன் இதயத்திலோ
தமிழ் பொங்கி வழிகிறது


உவமை கவிஞர் சுரதா
புதிது புதிதான எண்ண மலர்களில்

கவிதை தேன் அருந்திய

எண்ணத்துப்பூச்சி


கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்

சொற்களை செதுக்கி

மன உணர்வுகளுக்கு உருவம் கொடுக்கும்

எழுதுகோல் சிற்பி

Thursday, August 29, 2013

முகவரிகள் - கவிஞர் மு.மேத்தா & கவிக்கோ அப்துல் ரஹ்மான்

கவிஞர் .வாலி அவர்கள் ஒருமுறை தன்னை
அறிமுகம் செய்யும் முகமாக பின்வருமாறு குறிப்பிட்டார்


நான் திருவரங்கத்தில் பிறந்தேன்

திரைஅரங்கத்திற்குள் நுழைந்தேன்


சிக்கனமாகவும் சிறப்பாகவும் இருந்த இந்த வரிகள்
என் மனதை கவர்தன.

இதைபோல் ஒவ்வொரு கவிஞர் பற்றியும் எழுத
எண்ணினேன்.


முகவரிகள் என்ற தலைப்பில் கவிதைகள் உதயமாயின.


கவிஞர் மு.மேத்தா

பெரியகுளத்தில் இருந்து

புறப்பட்ட கவிதைநதி





கவிக்கோ அப்துல் ரஹ்மான்

வாணியம்பாடியின்

வானம்பாடி

தாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில்


நான் திருச்சியில் உள்ள சேஷசாய் தொழில் நுட்ப பயிலகத்தில் டிப்ளோம

இன்ஜினியரிங் படித்து கொண்டிருந்த பொழுது (1993 -ல்) என்னுடன்

படித்த சங்கர் கணேஷ் மற்றும் ராஜு மேலும் முன்று
மாணவர்கள் விடுமுறை நாளில் கல்லணை சென்று
சுழலில் சிக்கி உயிர் இழந்தனர்.











இந்த நிகழ்வு ஒட்டுமொத்த திருச்சியையே சோகத்தில்
ஆழ்த்தியது

கல்லணை சென்ற மாணவர்கள் அனைவரும் கல்லூரி

விடுதியை சேர்ந்தவர்கள்


இதில் சங்கர் கணேஷ் மற்றும் ராஜு பால்ய பருவத்தில் இருந்தே நண்பர்கள்

சங்கர் கணேஷின் அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்கள்.

ராஜுவின் அப்பா கால்நடை மருத்துவர்.

சங்கர் கணேஷ்சும் ராஜுவும் ஒன்றாம் வகுப்பில்

இருந்தே ஒன்றாக படித்தவர்கள்


சங்கர் கணேசும் ராஜுவும் நிலகோட்டையை சேர்ந்தவர்கள்.

"விடுதியை விட்டு

செல்லாதே"

"விடுதியை விட்டு
செல்லாதே"








என்று படித்து படித்து சொன்னேனே

இப்படி எங்களை விட்டு பிரிந்து விட்டாயே

என்ற சங்கர் கணேஷின் தாயாரின் கதறல் பார்போரை

உள்ளம் உருக செய்வதாய் இருந்தது.


தினத்தந்தி இதழ இந்த செய்திகளை வெளியிட்டு இருந்தது.



அந்த தாயின் தவிப்பை நான் அப்பொழுதே பாடல் வடிவில்
எழுதியிருந்தேன்


அதோடு சில புதிய சரணங்களையும் சேர்த்து எழுதியுள்ளேன்

உங்களது மேலான பார்வைக்கு என் படைப்பை
படையல் ஆக்குகிறேன்

பல்லவி

தாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில்
உறங்காத விழிகள் இரண்டும் கண்ணீர் என்னும் ஆற்றில்

சரணம்-1

ஓடிவரும் நதியலைகள்
காலத்தின் கண்ணீர் மொழி
போகுமிடமெலாம் கதை கூறுமோ
சோகங்களை கூறி மெல்ல கலைந்தோடுமோ
நீ நடந்த பாதை எல்லாம்
நான் நடந்து பார்த்தேன் மகனே
தேராக நீ அசைந்த பாதையிலே
நினைவுகளின் ஊர்கோலம் கண்ணே

சரணம்-2

நெஞ்சில் ஆடும் நினைவலையில்
சிறுமலரின் மழலை மொழி
சிலுவையாகி எந்தன் நெஞ்சில் சுமையாகுமோ
சுமைதாங்கி ஒன்றை காலம் தரகூடுமோ
தேன் கொடுத்த பூக்கள் எல்லாம்
சருகாக உதிரும் கோலமே
வேர்பிடித்த மண்ணில்
மழை நீரின் ஈரமே


சரணம்-3

காணுகின்ற கனவுகளில்
துரத்தி வரும் உன் நினைவு
பூமலருகின்ற வேளை புயல் வீசியதோ
தீ இல்லாமலே அனல் பேசியதோ
வான் பார்த்து போகும் பயணம் உனக்கு
மண் மீது நரகம் எனக்கு
நீ நடை வண்டி பயின்ற காலம் மனதில்
நடைபோடும் நேரம் இன்று
நீராக மாறிய மேகமே
கண்ணீராக மாறிய சோகமே

அம்மா சொன்ன கவிதைகள்




என் தாயார் தற்போது உயிருடன் இல்லை

என்றாலும் அவர் பேசிய பேசசுக்கள்


என் நெஞ்சில் என்றும் வாழ்ந்துகொண்டே

இருக்கும்


ஒரு சிலவற்றை இங்கே பதிவு செய்கிறேன் .

வாசகர்களுக்கு அவரவர் அம்மாவின் நினைவுகள்

அலைமோதும் என்று நம்புகிறேன்


என் தாயாரின் வாயிலிருந்து வரும் சொற்கள்

பல நேரங்களில் கவித்துவமாக இருக்கும்.


தண்ணீர் பஞ்சம் பற்றி அலுப்போடு கூறியது


தண்ணீர் பஞ்சத்தில்

பெரம்பலூர் அக்கானா

மணப்பாறை தங்கச்சி



என் தாத்தா (அம்மாவின் அப்பா )

சொத்துக்கள் அனைத்தும் ஆண் பிள்ளைக்கே (என் மாமா) உயில் எழுதி வைப்பேன்

என்றதும் மிகப்பெரிய சண்டையும் வாக்குவாதமும்

நடந்தது.

பின்பு சிறிது நேரத்தில் என் சித்தியும் (அம்மாவின்
உடன் பிறந்த தங்கை )அம்மாவும் சமையல்
அறையில் ஏதோ சிரித்து பேசி கொண்டிருந்ததை
காதில் கேட்டுவிட்டு


என்ன பாப்பா ஒரே சிரிப்பா இருக்கு?
என்று கேட்டதற்கு கோபமும் கேலியும் கலந்த
கவித்துவ வார்த்தைகளில் சொன்ன பதில்


எங்க சிரிப்பை யாருக்கும்

நீங்க

உயில் எழுதி வைக்க முடியாது



ஒரு தீபாவளி மதியம் திருச்சியில் இருந்து அருகில்

உள்ள என் அப்பாவின் ஊரான முததரசநல்லூர்

கிராமத்திற்கு சென்றே ஆக வேண்டும்

என்று சொன்னதால் மிகவும் கூட்டமான


"பேருந்தில் என்தாயார் மாட்டிக்கொள்ள நேர்ந்தது
"
பேருந்தை சுற்றி சுற்றி வந்து என் அம்மாச்சி
(அம்மாவின் அம்மா ) பட்ட தாய்மையின் தவிப்பை
கோழியுடன் ஒப்பிட்டு பேசுவார் என் தாய்


கவிஞர் கண்ணதாசன் பொல்லாதவன் திரைப்படத்திற்கு

எழுதிய "நான் பொல்லாதவன் " எனத்தொடங்கும்


பாடலில் இடம் பெற்ற

"வானத்தில் வல்லுரு வந்தாலே கோழிக்கு

வீரத்தை கண்டேனடி"

என்ற வரிகளின் உவமைநயத்திற்கு சற்றும்
குறைவுபடாத வரிகள் என் தாயாரின் வரிகள்

என்பதை பெருமை பொங்க கூறிக்கொள்ள விழைகிறேன்.

என்ன ஒரு வேறுபாடு கண்ணதாசனுக்கு எழுதும்

வாய்ப்பு கிடைத்தது.

என் தாயாருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை


அந்த வார்த்தைகள் பின்வருமாறு:




பேருந்தை சுற்றி சுற்றி

எங்க அம்மா வந்தது பார்க்க

கோழி குஞ்சு உள்ள

மாட்டிக்கும் பொழுது

தாய் கோழி தவிப்போட பஞ்சாரத

சுற்றி சுற்றி

வருமே அது மாதிரி


இருந்துச்சு

சோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம் -1

துக்ளக் பத்திரிக்கையின் கேள்வி பதில்

பகுதியில் இருந்து:



கேள்வி: பெண்கள் முன்னேற்றம் என்றால்

ஏன் உங்களுக்கு பாகற்காயாக கசக்கிறது?

இதற்கு சோவின் ஆணாதிக்க


திமிர்பிடித்த பதில்

உங்கள் கூற்றை நான் மறுக்கிறேன்.


பாகற்காய் அல்ல, எட்டிக்காய்


Tuesday, August 20, 2013

சோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம்

சோ பெண்களை பற்றி மட்டம் தட்டி பேச்கூடிய நபர்.

நிறைய சான்றுகளை கூறலாம்.


"ஆணாதிக்கம் என்னிடம் உள்ள நல்ல பழகங்களில் ஒன்று " - சோ.ராமஸ்வாமி

இந்த மனிதர்தான் பார்லிமென்ட் கட்டிடத்தின் மேல்
பறக்கும் நம் தேசீய கொடியை நீக்கிவிட்டு


அதற்கு பதிலாக புடவையை வரைந்து கார்டூன் போட்டு
ஒரே நேரத்தில் பெண்களையும் நாட்டையும் அவமதித்த
ஆணாதிக்க வெறியன்.


மகளிர் இட ஒதிக்கீடு மசோதா விற்குத்தான்
சோவின் மேற் சொன்ன அட்டுழிய கார்டூன். .


இதை போலவே நிறைய சான்றுகளை கூறலாம்.

இந்த பதிவில் தொடர்ந்து கூற இருகிறேன்.

என் கவிதை


தெருவோரக்குரல்

மழைக்காலமும் பனிக்காலமும்
சுகமானவைதான்
வீட்டில் இருந்துகொண்டு
வசதியாக
வேடிக்கை பார்பவர்களுக்கு

தமிழ் ஈழம்

பாரதியார் எழுதிய கவிதை "சிங்கள தீவினர்கோர்
பாலம் அமைபோம்"


என்ற கவிதை சிங்கள இனத்திற்கு
ஒப்புதல் வாக்குமூலம் போல் இருக்கிறது

ஈழ தமிழர்கள் கேட்கும் தமிழ் ஈழத்திற்கு எதிர்நிலையில்
இந்த கவிதை இருக்கிறது என்பது என் கருத்து.

Monday, August 19, 2013

தெருவோரக்குரல்

தெருவோரக்குரல் மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவைதான் வீட்டில் இருந்துகொண்டு வசதியாக வேடிக்கை பார்பவர்களுக்கு

என் கேள்வி

பாரதியார் எழுதிய கவிதை சிங்கள தீவினர்கோர் பாலம் அமைபொஎஅம் என்ற கவிதை சிங்கள இனத்திற்கு ஒப்புதல் வாக்குமூலம் போல் இருக்கிறது ஈழ தமிழர்கள் கேட்கும் தமிழ் ஈழத்திற்கு எதிர்நிலையில் இந்த கவிதை இருக்கிறது என்பது என் கருத்து.

IRANKAL KAVITHAI

வாழிய நீ வாலி ஆழி சூழ் உலக மெல்லாம்! அருந்தமிழை அருந்த வைத்து! மேழியாம் எழுதுகோலால்! உள்ளங்களை உழுதவனே! கோழிகளும் குயில்களைப் போல்! கூவிப் பார்க்கும் கலியுகத்தில்! ஏழிசையால் ஏறி நின்ற! வாலியெனும் பாட்டரசே! ஊழித்தீ அணையுமட்டும்! உன்பாட்டு நிற்குமன்றோ! வாழிய நீ பாட்டுருவில்! வாழ்வாங்கு இத்தரையில்!

யாரோ எழுதிய கவிதை

கவிஞர் வாலி அவர்கள் காலமானபோது யாரோ ஒருவர் எழுதிய கவிதை





வாழிய நீ வாலி ஆழி சூழ் உலக மெல்லாம்! அருந்தமிழை அருந்த வைத்து!


 


மேழியாம் எழுதுகோலால்! உள்ளங்களை உழுதவனே!


 


கோழிகளும் குயில்களைப் போல்! கூவிப் பார்க்கும் கலியுகத்தில்! ஏழிசையால் ஏறி நின்ற!


 


வாலியெனும் பாட்டரசே! ஊழித்தீ அணையுமட்டும்! உன்பாட்டு நிற்குமன்றோ! வாழிய நீ


 


பாட்டுருவில்! வாழ்வாங்கு இத்தரையில்!


 

கவிஞர் வாலி




நாளை இந்த வேளை பார்த்து
ஓடி வா நிலா
இன்று எங்கள் கவிஞன் இல்லை
சென்று வா நிலா