Translate

Monday, May 21, 2018

மக்கள் கவிஞரும் உணர்ச்சிக்கவிஞரும்
வசதியிருக்கிறவன் தரமாட்டான் - அவனை

வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்

 

  • இந்த வரிகள் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு திரைப்படப்பாடலில் எழுதியது.

இந்த வரிகளை ஒரு நூலில் வாசித்தபோது

என் நினைவு புத்தகம் தன் பழைய பக்கங்களை புரட்டி பார்த்தது .

சில வருடங்களுக்கு முன் நான் பார்வையாளனாக கலந்து கொண்ட ஒரு

கவிதை நூல் வெளியீட்டு விழா ……

விழாவின் நாயகன் அந்த  கவிதை நூலின் ஆசிரியர் தொல் .திருமாவளவன் .

அந்த நிகழ்வில் பலத்த ஆரவாரங்களுக்கிடையில் ,


"சிங்கள இனவெறியர்கள் ஈழ தமிழர்களுக்கான உரிமைகளை ஒரு போதும் தரமாட்டார்கள் .

எங்கள் உரிமைகளை பெறாமால் ஒரு போதும் அவர்களை விடமாட்டோம் "

என்று அனல் தெறிக்க

உணர்ச்சி கவிஞர் .காசி ஆனந்தன் சூளுரைத்தார் .

எப்படி இருவரும் ஒரே மாதிரி சிந்தித்தார்கள் ?

என்று எண்ணி வியக்கிறேன்.

கவிஞன் என்பவன் தனி மனிதன் அல்லன் .

ஒரு மாபெரும் மக்கள் தொகுதியின் ஒற்றை குரல் என்ற புரிதலே

அந்த புதிரான கேள்விக்கான பதிலாக பார்க்கிறேன் .

Thursday, May 17, 2018

பாரி சாலனுக்கு ஒரு கேள்வி
பெண்ணியம் என்ற கருத்தாக்கம் இல்லுமினாட்டிகளால் வேண்டுமென்றே

பரப்பப்படுகின்றது என்று கூறுகிறீர்கள்.

அதாவது  பெண் சுதந்திரமாகவே இருக்கிறாள்

குடும்ப அமைப்பை சிதைப்பதே இல்லுமினாட்டிகளின் நோக்கம்

இதுவே நீங்கள் சொல்லவரும் கருத்து எனில்,

பெண்களுக்கு மட்டும்  கற்பு நெறியை நீங்கள் வலியுறுத்துவது ஏன்?

வள்ளலார்
உலகம் அனைத்தும் ஒரே ஆட்சியின் கீழ் வர வேண்டும் என்ற அன்னி பெசன்ட் அம்மையார் (ஹோம் ரூல் இயக்கம் மற்றும் ப்ரம்ம ஞான சபையை நிறுவியவர்) ஒரு பிரீ  மசோனரி என்று ஆன்டி இல்லுமினாட்டி கள் கூற தொடங்கியுள்ளனர்.

சுவாமி விவேகானந்தரையும் இந்த பட்டியலில் சேர்த்து விட்டனர் .

“அகில உலகமும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆட்சியின் கீழ் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.”

என்று வள்ளலார் அறைகூவல் விடுதிருப்பதால் அவரையும் சேர்த்து விடுவார்களோ என்று நான் அச்சப்படுவதால்  சில விளக்கங்கள் கூற முற்பட்டுள்ளேன்.

"கருணை இல்லா  ஆட்சி கடுகி ஒழிக”

என்று பிரிட்டிஷ் ஆட்சிக்கு (இங்கிலாந்து அரச குடும்பம்)

எதிராக சங்கநாதம் இசைத்தவர் வள்ளலார்.

இங்கிலாந்து அரச குடும்பமே இல்லுமினாட்டிகளின் எஜமானர்கள் என்று ஆன்டி இல்லுமினாட்டிகள் கூறுவதால் வள்ளலாரை பிரீ  மசோனரி என்று முத்திரை குத்தமுடியாது.

மேலும் அவர் ஒரு மகான் மட்டுமல்ல.

ஒரு சிறந்த சித்த மருத்துவரும் (நமது பாரம்பரிய மருத்துவம் ) ஆவார்.


தந்தை பெரியார்தந்தை பெரியார் தமிழ் மொழியை அவமதித்ததாக (தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று பெரியார் கூறியதாக) கூறிய எச் .ராஜா வின் அவதூறுக்கு என் பதிலடி

தமிழ் மொழியை நீச பாஷை  என்று சங்கராச்சாரி கூறியதற்கு எச் .ராஜாவின்

பதில் அல்லது எதிர்ப்பு என்ன ?

விஜயேந்திரர் தமிழ்தாய் வாழ்த்தை அவமதித்த போது எச் .ராஜா என்ன செய்து கொண்டிருந்தார் ?

அது மட்டுமல்ல. பெரியார் அப்படி கூறவே இல்லை

“தமிழ் மொழி பற்று தேவைதான் . அதே  வேளையில் தமிழர்கள் ஆங்கிலமும் கற்று முன்னேறவேண்டும். பின்தங்கிவிட கூடாது” என்றே பெரியார் கூறினார்

 

 

 

CONCRETE POEM

CONCRETE POEM ( IT IS A TYPE OF POEM)

Wednesday, May 16, 2018

மஸ்வாதி கல்லறைசொர்க்கத்தின் திறவுகோல்கள்

உங்களின் சட்டைப் பைகளில்

மட்டுமே உள்ளதாக பகல்கனவா ?

“மற்றவர்களை தீர்ப்பிடாதிருங்கள்”

என்ற விவிலிய வரிகளை நீங்கள் வாசித்ததில்லையா?

அல்லது உங்கள் கண்களுக்கு

அந்த புனிதமிக்க வரிகள் தென்படவே இல்லையா?

பிணத்தை காறி உமிழ்வதை போன்று

இதென்ன கொடூர செயல்?

“பாவம் செய்யாதவன் எவனோ

அவனே அவள் மீது கல் எரிய கடவன்”

என்ற தேவமைந்தனின்

வார்த்தையை அல்லவா

நீங்கள் சிலுவையில் அறைந்தீர்கள்?  


 
பிறக்கும் போது தாலாட்டு
இறந்த பின்போ ஒப்பாரி
இடையினில் வரும்
பின்னணி இசையே இந்த வாழ்க்கை
இசைக்கும் கலைஞன்
எல்லாம் வல்ல இறைவன்

நடுவினில் புகும் சுருதி பேதங்களே!
உங்கள் நலன்களை மட்டும்
பேணும் சுய நல கீதங்களே!
பாவமன்னிப்பு கேட்டு
உங்களை மட்டும் பத்திரப்படுத்திக்கொண்டு
அவர்களை மட்டும்
அவமான புதைகுழியில்
அடக்கம் செய்வீரோ ?
வாழ்க்கையின் கொல்லைப்புற
தோட்டத்தில் கண் உறங்கும்
அவர்கள்மீது இனியேனும்
பன்னீர் பூக்கள் சொரியாவிடினும்

சருகுகளை தூவி
சங்கடப்படுத்தவேண்டாம்.


அடையாளம்


மல்லிகை பந்தல் போட்ட வீடு

தெற்கு பார்த்த வீடு 

பில்டிங் காண்ட்ராக்டர் வீடு

பாட்டியம்மா வீடு

இப்படி எத்தனை எத்தனையோ

அடையாளங்களை கடந்த காலங்களில்
தாங்கி நின்றது அந்த வீடு
 
அந்த பெண் -
உயிரோடு கதற  கதற
தீயிட்டு கொளுத்தப்படும்வரை!